சிறுத்தை சிவா இயக்கத்தில் 'தல' அஜீத் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், மதுமிதா என ஏராளமான நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

 

இப்படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பினை வருகின்ற ஜூன் 25-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கிட, படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றிய திலீப் சுப்பராயன், இப்படத்தில் புதிதாக தற்போது இணைந்திருக்கிறார். இதனால் இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS