இதுபோன்ற தகவல்கள் 'மிகுந்த' வேதனையளிக்கிறது.. அஜித் தரப்பு விளக்கம்!
Home > தமிழ் news
இணையத்தில் பரப்பப்படும் தகவல்கள் மிகுந்த வேதனையளிக்கிறது என, நடிகர் அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கஜா புயலுக்கு நடிகர் அஜித் ரூ.5 கோடி நிதியுதவி அளித்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனை அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்த நிலையில் இதுபோன்ற தகவல்கள் மிகுந்த வேதனை அளிப்பதாக நடிகர் அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது,'' அஜித் செய்யும் நன்கொடைகள் அனைத்தும் அவரது செய்தி தொடர்பாளர் வழியாகவே தெரிவிக்கப்படும். அல்லது அதிகாரப்பூர்வமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். இது போன்ற போலியான தகவல்களை மிகுந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தில் இணையத்தில் பரப்புவது மன வேதனையை அளிக்கிறது,'' என்றனர்.