விஜய்,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் 'தளபதி62' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இப்படத்தில் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

 

அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு பிரமாண்ட குழுவுடன் 'தளபதி 62' படக்குழுவினர் கைகோர்த்துள்ளனர். இதுகுறித்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறும்போது, "இந்தியாவின் முதல் விண்வெளி படமான 'டிக் டிக் டிக்' படத்துக்கு விஎப்எக்ஸ் பணிகளை மேற்கொண்ட அஜய் விஎப்எக்ஸ் குழுவினர் 'தளபதி 62' படத்தின் விஎப்எக்ஸ் பணிகளை மேற்கொள்ளவுள்ளனராம்.

 

'டிக் டிக் டிக்' படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும், அப்படத்தின் விஎப்எக்ஸ் பணிகளைப் புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS