ஹரி இயக்கத்தில் விக்ரம், பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படம் சாமி 2. சாமி படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

சாமி 2 படத்தில் நடிகை திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக நமது நெருங்கிய வட்டாரங்களில் நாம் விசாரித்த போது சாமி 2 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருவது உண்மைதான் என தெரிவித்தனர்.

 

இந்தநிலையில் படத்தை தயாரித்து வரும் தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஐஸ்வர்யா ராஜேஷ்-விக்ரம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, அதிகாரப்பூர்வமாக இதனை உறுதிப்படுத்தியுள்ளது.  

BY MANJULA | JUL 4, 2018 4:49 PM #VIKRAM #SAAMY2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS