புகைப்பட உதவி @ANI

 

இன்று பிற்பகல் தூத்துக்குடி பிரைன் நகரில் போலீஸ்-ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு ஒருவர் பலியானார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

 

இதேபோல அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை அவர்களின் உறவினர்கள் வாங்க மறுத்ததால், போலீஸ்-பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முதலில் தடியடி நடத்தினர். அப்போதும் போராட்டக்காரர்கள் பின்வாங்க மறுத்ததால், வானத்தை நோக்கி  இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால், மருத்துவமனை உள் பகுதி பெரும் பதற்றமாகக் காணப்பட்டது. இதனால் நேற்றில் இருந்து தூத்துக்குடி பகுதி அமைதி இழந்து காணப்படுகிறது.

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக  2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு, டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS