தங்கம் வென்று நாடு திரும்பிய கையோடு.. காதலனை 'ஏர்போர்ட்டிலேயே' நிச்சயம் செய்துகொண்ட வீராங்கனை!

Home > தமிழ் news
By |
தங்கம் வென்று நாடு திரும்பிய கையோடு.. காதலனை 'ஏர்போர்ட்டிலேயே' நிச்சயம் செய்துகொண்ட வீராங்கனை!

இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகத்(24) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு இந்தியா சார்பாக தங்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா சார்பாக தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை வினேஷ்க்கு கிடைத்துள்ளது.

 

தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவர் இந்தியா திரும்பினார்.அப்போது டெல்லி விமான நிலையத்திலேயே வைத்து வினேஷ்க்கும் அவரது நீண்ட நாள் நண்பருமான சோம்வீர்  ரதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 

இதில் நெருங்கிய நண்பர்களும்,உறவினர்களும் கலந்து கொண்டு வினேஷ் போகத்-சோம்வீர் ரதி இருவரையும் வாழ்த்தினர்.

ASIANGAMES2018, VINESHPHOGAT, INDIA