கேரளாவைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் 21 வயது நிரம்பாமலேயே துஷாரா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த துஷாராவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 

இதனை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இந்தத் திருமணம் செல்லாது என தீர்ப்பளித்தது. ஆனால் நந்தகுமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்து மத சட்டத்தின்படி இந்த திருமணம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும், "யாருடன் சேர்ந்து வாழ வேண்டும்' எனத் தீர்மானிப்பதற்கு துஷாராவுக்கு முழு சுதந்திரம் உள்ளது.

 

எனவே, கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம். 18 வயதைக் கடந்த பெண், 21 வயதைக் கடக்காத ஆணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்வதற்கு உரிமை உண்டு' என்றும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

BY MANJULA | MAY 7, 2018 3:12 PM #KERALA #SUPREMECOURT #MARRIAGE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS