'பேட்ட'யில விஜய் சேதுபதி 'துப்பாக்கி' தூக்க இதுதான் காரணமா?

Home > தமிழ் news
By |
'பேட்ட'யில விஜய் சேதுபதி 'துப்பாக்கி' தூக்க இதுதான் காரணமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் பேட்ட திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், திரிஷா,விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாஸுதீன் சித்திக் மற்றும் மேகா ஆகாஷ் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

 

 

பேட்ட படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

 

இந்த நிலையில் 96, பேட்ட படங்களை தொடர்புபடுத்தி நடிகை திரிஷா பகிர்ந்திருக்கும் மீம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

கதைப்படி 96 படத்தில் ராமும்(விஜய் சேதுபதி), ஜானுவும்(திரிஷா) பிரிந்து விடுவார்கள். பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டாருடன் ஜானு(திரிஷா) சேர்ந்தததால், விஜய் சேதுபதி  துப்பாக்கி தூக்குகிறார் என்பது போல, ஜாலியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் 'இந்த மீம்' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்று வருகிறது.