'என்ன விலை அழகே' என்ற பாடலுக்கு ஏற்ப ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நடிகை சோனாலி பிந்த்ரே, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "வாழ்க்கை சில நேரங்களில் நீங்கள் எதிர்பாரத விஷயத்தை செய்து விடும்.உடலில் ஏற்பட்ட வலி காரணமாக அண்மையில் மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளை எடுத்துக் கொண்டேன். பரிசோதனையின் முடிவில் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு உறவினர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வேளையில் என்னை ஆதரித்து குவியும் அன்பு என்னை பலப்படுத்துகிறது. அதற்கு நான் கடன் பட்டுள்ளேன்,'' என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS