பிக்பாஸ் 2-வது சீசன் இன்று தொடங்குகிறது. முதல் சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே 2-வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இதனால் இந்த சீசனைக்காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகததால், அந்த 15 பேர் யார் என்று அறிந்துகொள்ளும் ஆர்வமும் அனைவரிடமும் உள்ளது.

 

கடந்த ஓரிரு நாட்களாக 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் நடிகை சிம்ரன் கலந்து கொள்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனால் சிம்ரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என நடிகை சிம்ரன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போட்டோஷாப் மூலமாக புகைப்படங்களை நன்றாக மார்பிங் செய்துள்ளனர். நான் எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சமீபமாக பங்கேற்கவில்லை. வருங்காலத்திலும் பங்கேற்க மாட்டேன்,'' என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

BY MANJULA | JUN 17, 2018 10:28 AM #KAMALHAASAN #BIGGBOSS2 #SIMRAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS