#தளபதி63: விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது இவரா?... விவரம் உள்ளே!
Home > தமிழ் news
ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.ஈ.ஓ அர்ச்சனா கல்பாத்தி சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்,'' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தநிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'வில்லு' படத்தில் விஜய்-நயன்தாரா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
VIJAY, NAYANTHARA, #THALAPATHY63