'டைட்டில்,பிக்பாஸ் எல்லாம் அவங்களுக்குத் தான்'.. முன்னாள் போட்டியாளர் காட்டம்!

Home > தமிழ் news
By |
'டைட்டில்,பிக்பாஸ் எல்லாம் அவங்களுக்குத் தான்'.. முன்னாள் போட்டியாளர் காட்டம்!

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக சமூக வலைதளங்களில், தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஐஸ்வர்யாவை நடிகர் ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:-

 

100நாள் வெளி விஷயங்கள் உள்ள தெரியாமல் இருக்கனும்னு #BiggBoss @BiggbossTamil மறந்துட்டாறா??? அவர் இஷ்டம்  தான் எல்லாம்! டாஸ்க் உல்டாவா சொல்லிட்டியேமா ஐஸ்வர்யா நல்லா பொழச்சுப்ப..நல்லா புரிஞ்சு புரியாதமாதிரி நடிப்பு யம்மாடி..ஐஸ்வர்யா ஆர்மி கவலைப்படாதீங்க டைட்டில்,வீடு,பிக்பாஸ் எல்லாமே அவங்களுக்குத் தான்.

 

எப்புடி? மொட்டை போட மும்தாஜ் வேணும். ஐஸ்வர்யா தத்தாவுக்கு  ஹேர்கட் பண்ண ஹேர் ஸ்டைலிஸ்ட் வீட்டுக்குள்ள வருவாரு அது பனிஷ்மெண்ட்? விஜயலட்சுமிக்கு சாணி டாஸ்க் இதைவிட ஹேர்கட் மேட்டரு.. பிரமாதம் நடத்துங்க பிக்பாஸ்,''என தெரிவித்துள்ளார்.