'துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 'சர்கார்' படத்தில் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

 

கீர்த்தி சுரேஷ்,பழ.கருப்பையா,ராதாரவி,வரலட்சுமி சரத்குமார்,யோகிபாபு  என, ஏராளமான நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யோகிபாபு பெண் வேடமிட்டு அமர்ந்திருக்க அவரின் கன்னத்தில் ஒருவர் கிள்ளுவது போல காட்சிகள் உள்ளன. இதுகுறித்து வரலட்சுமி கன்னத்தில் கிள்ளுவது யார்? என்று கேட்க,பதிலுக்கு ரசிகர்கள் விஜய் என தெரிவித்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS