சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியாக சுமார் 277 கி.மீட்டர் தொலைவில் சேலம் டூ சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என மக்கள் இத்திட்டத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

 

எனினும் இதுகுறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 41 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இத்திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும். சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி என்று தெரிவித்தார்.

 

இந்த நிலையில் பிரேசில் போல பசுமை வழிச்சாலை திட்டத்தை அமைக்கலாமே என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேசக்கட்டுமானம் முக்கியம் தான்.ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்,'' என்று பதிவு செய்திருக்கிறார்.


 

BY MANJULA | JUN 20, 2018 11:54 AM #VIVEK #SALEM #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS