Watch Video: 'விதைத்தவன் தூங்கலாம்'.. சின்னத்திரை தொகுப்பாளராக களமிறங்கிய விஷால்!
Home > தமிழ் news
நடிகர்கள் கமல்,சூர்யாவைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் சின்னத்திரை தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இதற்கான ப்ரோமோ வீடியோவை சன் டிவி இன்று வெளியிட்டுள்ளது. அதில், ''விதைத்தவன் தூங்கலாம். விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா,'' என விஷால் கேள்வி எழுப்புவது போல காட்சிகள் உள்ளன.
தெலுங்கில் வெற்றி பெற்ற நிகழ்ச்சியின் தமிழ்ப்பதிப்பை விஷால் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A unique show hosted by @VishalKOfficial. Coming soon on @SunTV ! pic.twitter.com/uWb1djXVoM
— Sun TV (@SunTV) September 18, 2018
VISHAL, TELEVISION