'கடவுளின் தேசத்துக்கு' விஜய் வழங்கிய உதவித்தொகை எவ்வளவு?.. விவரங்கள் உள்ளே!
Home > தமிழ் news
மழைவெள்ளம்,நிலச்சரிவுகளால் உருக்குலைந்துள்ள கேரளாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளது.இளைஞர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் களத்தில் இறங்கி பல மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதவிர நடிகர்,நடிகைகளும் நிவாரண நிதிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலமாக,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த தகவல்களை அறிவதற்காக நம்பத்தகுந்த வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, ''விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவணை முறையில் நிதியுதவிகளை வழங்கி வருகிறார். அவர் வழங்கியதாக சொல்லப்படும் தொகையை விட அதிகமாகவே நிதியுதவியை வழங்கியுள்ளார்.
இதுநாள்வரை விஜய் எவ்வளவு தொகையினை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் என்பதை நாங்கள் கணக்கிடவில்லை என்பதால், எங்களால் அதுகுறித்த விவரங்களை சொல்ல முடியவில்லை,'' என்றனர்.