தனது 'ரசிகரின்' பெயரில் ரூ.1 கோடி நிதியளித்த 'தோனி' ஹீரோ!

Home > தமிழ் news
By |
தனது 'ரசிகரின்' பெயரில் ரூ.1 கோடி நிதியளித்த 'தோனி' ஹீரோ!

கேரள வெள்ளத்திற்கு தனது ரசிகரின் பெயரில் ரூபாய் 1 கோடி நிதியை,தோனி படத்தின் ஹீரோ சுஷாந்த் ராஜ்புத் அளித்துள்ளார்.

 

கனமழை,நிலச்சரிவு ஆகியவைகளால் ஒட்டுமொத்த கேரளாவும் தீரா சோகத்தில் ஆழ்ந்துள்ளது.எனினும் உலகெங்கிலும் இருந்து குவியும் நிதியும்,தன்னலம் கருதாதவர்களின் உதவியும் 'கடவுளின் தேசத்தை' மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் நடிகர் சுஷாந்த் ராஜ்புத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர் ஒருவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்,என்னிடம் பணமில்லை.ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில உணவுப்பொருட்களை வழங்க வேண்டும்.அவற்றை எப்படிக் கொடுப்பது? எனக் கேட்டிருந்தார்.

 

பதிலுக்கு சுஷாந்த் கவலைப்படாதீர்கள் நான் உங்கள் பெயரில் ரூபாய் 1 கோடியை நிவாரண நிதியாக அளிக்கிறேன்,என தெரிவித்திருந்தார்.சொன்னதுபோலவே கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடியை அளித்த சுஷாந்த், அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

 

மேலும், ''நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைத்தீர்களோ அதனை செய்துவிட்டேன்.நீங்கள் தான் என்னை இந்த உதவியை செய்ய தூண்டினீர்கள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.சரியான நேரத்தில் தேவையானவற்றை நீங்கள் அளித்துள்ளீர்கள்,''என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

சுஷாந்த்தின் இந்த செயல்,சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.