சென்னை-சேலம் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தால், நடிகர் மன்சூர் அலிகானை சேலம் போலீசார் இன்று கைது செய்தனர்.

 

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியாக சுமார் 277 கி.மீட்டர் தொலைவில் சேலம் டூ சென்னை பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என மக்கள் இத்திட்டத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

 

ஆனால் கடந்த வாரம் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 41 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இத்திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும். சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி என்று பேசினார்.

 

இந்தத்திட்டத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் இதுதொடர்பாக சேலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், "சேலம் டூ சென்னை பசுமை வழிச்சாலை அமைத்து பெரியளவில் கொள்ளையடிக்கப் பார்க்கின்றனர். இதற்கு யாரும் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது,'' என பேசினார்.

 

இந்தநிலையில் வன்முறைக்கு ஆதரவாகப் பேசியதாக இன்று காலை நடிகர் மன்சூர் அலிகானை சேலம் போலீசார் சென்னை சூளைமேட்டில் வைத்துக்கைது செய்து, சேலம் அழைத்துச்சென்றுள்ளனர். 

BY MANJULA | JUN 17, 2018 12:09 PM #SALEM #MANSOOR ALI KHAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS