'சுசி லீக்ஸ் சர்ச்சை'.. நடந்தது என்ன? நடிகர் கார்த்திக் குமார் விளக்கம்!
Home > தமிழ் newsகடந்த ஒரு வாரகாலமாக கவிஞர் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என ஒருசில பெண்கள் #MeToo ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்தனர். இதனை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதவிர பாடகி சின்மயியும்,வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தார்.
சின்மயியின் குற்றச்சாட்டுக்கு முன்னதாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து இருந்தார்.தொடர்ந்து நேற்று மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து பதிலளித்து இருந்தார்.பதிலுக்கு சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில்,'' மிஸ்டர் வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும்,'' என தெரிவித்தார்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பிய சுசிலீக்ஸில் பாடகி சின்மயி குறித்து சொல்லப்பட்ட தகவல்களை தேடியெடுத்த நெட்டிசன்கள், முதலில் இவற்றுக்கு பதில் சொல்லுங்கள் என கேட்டனர். அதில் சின்மயி வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட் செய்வதாகவும், 4 முறை கருவை கலைத்ததாகவும் கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக சின்மயி வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்தார்.அதில், ''நான் கருக்கலைப்பு எல்லாம் செய்யவில்லை. அந்த வீடியோ உண்மையில்லை. சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்த போது என்னைப் பற்றி தவறாக பேசினார். அதில் உண்மையில்லை. அதற்கு மன்னிப்பு கேட்டு அவர் இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தார்.அதனை பப்ளிக்காக வெளியிட வேண்டும் எனத் தோன்றவில்லை,'' என்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் நடிகர் கார்த்திக் குமார்,'' சுசித்ரா மனநிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் சின்மயிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். அதற்கு ஆதாரமாக நான் இருக்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு சின்மயி,'' கார்த்திக் குமார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளுடன் வாழ்ந்து வந்தேன்.இப்போது எடை குறைந்தது போல உணர்கிறேன்.நன்றி,'' என பதிலளித்துள்ளார்.
Karthik Kumar
— Chinmayi Sripaada (@Chinmayi) October 14, 2018
Thank you! I have lived with these stories of the fictitious ‘4 abortions’, ‘adjusting for my career’ and threat of a ‘video’ that doesn’t exist for over a year.
I am grateful. It lifts the weight off.
Thank you. pic.twitter.com/mYTBE8D9UD