'தத்தளிக்கும் கடவுளின் தேசம்'.. 25 லட்சம் நன்கொடையை முதல்வரிடம் நேரடியாக வழங்கிய கார்த்தி!

Home > தமிழ் news
By |
'தத்தளிக்கும் கடவுளின் தேசம்'.. 25 லட்சம் நன்கொடையை முதல்வரிடம் நேரடியாக வழங்கிய கார்த்தி!

தொடர் கனமழையினால் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா வெள்ளத்தில் தொடர்ந்து தத்தளித்து வருகிறது. ஆங்காங்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதனால் 94 வருடங்களுக்குப்பின் மிகப்பெரிய பேரிடரை கேரளா சந்தித்துள்ளது.

 

இதற்கிடையே மழையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த  24 மணிநேரத்துக்கு கேரளாவில் மிக, மிக கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது என்று நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.   இதனால், மழையின் தாக்கமும், வெள்ளத்தின் தாக்கமும் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து நிதியுதவி குவிந்து வருகிறது. முன்னதாக நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா இருவரும் இணைந்து ரூபாய் 25 லட்சத்தை கேரளாவுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தனர். இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்து, நடிகர் கார்த்தி இதற்கான செக்கினை வழங்கினார்.