மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும் ஆருஷி கொலை வழக்கு..!
Home > தமிழ் newsநாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி தல்வார் கொலைவழக்கில்,சிறுமியின் பெற்றோரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்தது.இதனை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதனை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டது.அதோடு தல்வார் தம்பதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள நொய்டாவின் மருத்துவத் தம்பதிகள் டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார். இவர்களது வீட்டில் 2008 மே 13-ல் இவர்களது ஒரே மகளான ஆருஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரிக்காமல்,சரியான விசாரணையும் நடத்தாமல் அவரது வீட்டில் வேலை செய்யும் ஹேமராஜ் என்னும் நேபாளிதான் கொலையாளி என்று அறிவித்தனர்.ஆனால் மறுநாள் தல்வார் வீட்டின் மாடியில் அவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
காவல்துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்த இந்த வழக்கில்,சம்பவம் நடந்த இரவில் தனது மனைவி நுபுர் தல்வாருடன் ராஜேஷ் வீட்டில் இருந்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் அவர்களின் மேல் திரும்பியது.இந்நிலையில், மே 23, 2008-ல் ராஜேஷ் தல்வார்தான் அவரது மகள் ஆருஷியைக் கொன்றார் என கைது செய்து செய்யப்பட்டார். பின்னர் 50 நாட்களுக்கு பின் ஜாமீன் பெற்றார்.
அனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் ஜூன் 1, 2008-ல் வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது .இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் காஸியாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம், தல்வார் தம்பதிக்கு நவம்பர் 25, 2013-ல் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து தல்வார் தம்பதியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்து வந்த நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்துள்ளது.
''சிறுமி ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேம்ராஜை தல்வார் தம்பதியினர்தான் கொலை செய்தனர் என்பதை சிபிஐ நிரூபிக்க முடியவில்லை. கொலை செய்ததற்கான ஆதாரங்களும் சரியாக இல்லை. இதனால் சந்தேகத்தின் பலனை தல்வார் தம்பதிக்கு அளித்து அவர்களை விடுதலை செய்கிறோம்'' என்று தீர்ப்பளித்தது.
இதற்கு எதிராக மேல் முறையீடு செய்ய சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் கோரியது. அதற்குத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.