'ஒரே ஒரு செல்ஃபியில் வேர்ல்ட் பேமஸ்'...இன்ப அதிர்ச்சியில் கேரள பெண்...அப்படி யாருகூட செல்ஃபி எடுத்தாங்க?
Home > தமிழ் newsதுபாய்க்கு சுற்று பயணம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன்,கேரள பெண் ஒருவர் எடுத்த புகைப்படம் அவரை மிகவும் பிரபலமான ஒருவராக மாற்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக துபாய்க்கு 2 நாள் சுற்று பயணத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி.நேற்று முன் தினம் அங்கு சென்ற அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய அவர்,ஜெபல் அலி தொழிற்பேட்டை அருகில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு சென்றார். அங்கிருந்த தொழிலாளர்களுடன் உரையாடினார்.
பின்னர் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் குழுமியிருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் உரையாற்றினார்.இதனையடுத்து துபாய் விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்தியை காண்பதற்கு ஏராளமானோர் முண்டியடித்தனர்.அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் ராகுலுடன் செல்ஃபி எடுத்தார்.அவர் செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் ராகுல் காந்தி பதிந்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி பதிந்திருந்த புகைப்படம் பல செய்தித்தாள்களில் இடம் பெற்றிருந்தது.இதனையடுத்து அந்த செல்ஃபி பெண், பிரபலமானார்.அவர் யார் என நெட்டிசன்கள் தேட ஆரம்பித்தனர்.அப்போது தான் அவர்,கேரள மாநிலம் காசர்கோடைச் சேர்ந்த ஹாசின் அப்துல்லா என்பதும் அவர் துபாயில் 'எவர்கிரீன் ஈவன்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருவதும் தெரியவந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹாசின் '' ஒரே நாளில் நான் இவ்வளவு பிரபலமாவேன் என்று நிச்சயம் நினைக்கவில்லை.அந்த புகைப்படம் வெளியானதில் இருந்து எனக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.ராகுல் காந்தியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என குறிப்பிட்டார்.