ஜப்பானில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம்.. 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Home > தமிழ் news
By |
ஜப்பானில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம்.. 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஜப்பானில் அதிகாலை நிகழ்ந்துள்ள நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலதரப்பட்ட வீடுகள் இடிந்தும் நிலத்தில் சரிந்து புதைந்தும் கிடக்கின்றன. ஜப்பானின் வடக்கு மாகாண தீவு ஹொக்கைடோ.

 

இங்கு எரிபொருள் உற்பத்தி செய்யும் பவர் ஸ்டேஷன்களே அதிகம். இந்த பகுதிகளில்தான் அதிகாலை 3 மணிக்கு, சுமார் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலநடுக்கம் உண்டான சில நிமிடங்களிலேயே மின்சாரம் மற்றும் அலைவரிசைகள் தடைபட்டு நகரமே இருளில் மூழ்கியது.

 

ஏறக்குறைட 40 நொடிகள் நீடித்த இந்த வேகமான நிலநடுக்கத்தில், 1.5 மீட்டர் ஆழத்துக்கு வீடுகள் அதிர்ந்து மண்ணுக்குள் சரிந்து பாதியாக புதையுண்டு கிடக்கின்றன. சுமார் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

EARTHQUAKE, EARTHQUAKE, JAPAN, HOKKAIDOISLAND, EARTHSHAKE