‘ஒரே ஃபுளோரில் 230 பெண்களை அடைத்துவைத்து பலவிதமாக சித்ரவதை’: தப்பியோடி வந்த பெண் வாக்குமூலம்!
Home > தமிழ் newsசீனாவில் குறிப்பிட்ட இஸ்லாமிய சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த பெண்களைத் தேடிப் பிடித்துக்கொண்டு பெரும் சிறைச்சாலை போன்ற இடத்தில் அடைத்து வைத்து, மனித உரிமை மீறலுக்கு எதிராக பல விதங்களில் துன்புறுத்தி, சித்ரவதை செய்து வருவதாக அங்கிருந்த எப்படியோ தப்பியோடி வந்த பெண் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சீனாவில் வெகுநாட்களாகவே இப்படியான வெறிச்செயல்கள் 2 பில்லியன் பெண்கள் மீது நடத்தப்பட்டு வருவதாக, மனித உரிமை அமைப்பொன்று முன்னதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், மிர்ஹிகுள் தர்சுன் என்கிற 29 வயது பெண், இப்படியான ஒரு ரகசிய இடத்தில் மாட்டிக்கொண்டு தன்னுடனான ஆயிரக்கணக்கான பெண்களுடன் தானும் சேர்ந்து தவித்ததாகவும் கூறியுள்ளார்.
அவர்கள் அவ்வப்போது இந்த பெண்களை அடித்து பாலிய ரீதியில் துன்புறுத்துவது, முகத்திரை அணிந்தாலோ- அங்கு கொடுக்கப்படும் அடையாள அட்டையை தொலைத்துவிட்டாலோ கடுமையாக தண்டிக்கப்படுவது, ஒரே ஃபுளோரில் 230 பெண்களை அடைத்து வைத்து நாலைந்து நாட்கள் தூங்கவிடாமல் சித்ரவதை செய்யப்படுவது, இரும்பு நாற்காலிகளில் அமரவைத்து எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது, குளியலறை மற்றும் கழிவறைகளில் கேமரா, நிர்வாணமாக்கி பலமணிநேரம் அறையில் அமர்த்தி வைப்பது உள்ளிட்ட கொடூரச் செயல்களை செய்ததாகவும், தன்னை கொன்றுவிடச் சொல்லி கெஞ்சி பாத்ததாகவும் கூறியவர், பின்னர், அங்கிருந்து தான் தப்பியோடி வந்துவிட்டதாக, வாஷிங்டன்னின் பத்திரிகையாளர் சந்திப்பில் அம்பலப்படுத்தியுள்ளார் மிர்ஹிகுள்.