நிதி நெருக்கடி..பிரதமர் மாளிகையில் உள்ள 70 கார்கள்.. 8 எருமைகள் ஏலம்!
Home > தமிழ் newsசிக்கலான நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தானை மீட்க முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக முன்னதால பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறியிருந்ததோடு, இதற்கென பிரத்தியேகமான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார்.
இதன் முதல் கட்டமாக பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் இருக்கக் கூடிய சுமார் 70 வகையான சொகுசு கார்களை எல்லாம் ஏலத்துக்கு விடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதோடு அரசின் கட்டுப்பாட்டில் பயன்பாட்டில் அல்லாத நான்கு ஹெலிகாப்டரகள், உட்பட விற்கப்பட உள்ளன.
மேலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வளர்த்துவந்த 8 எருமை மாடுகளை விற்பதற்கு முடிவு செய்வதாகவும், மேலும் பிரதமர் மாளிகையில் இருக்கும் மெர்சிடஸ், BMW,பென்ஸ் உள்ளிட்ட உயர் ரக வாகனங்களை, அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் நிமித்தமாக ஏலத்தில் விடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.