பெற்ற தந்தை மீது 7 வயது சிறுமி புகார்.. நடவடிக்கை எடுத்த, பெண் காவல்துறை ஆய்வாளர்!

Home > தமிழ் news
By |
பெற்ற தந்தை மீது 7 வயது சிறுமி புகார்.. நடவடிக்கை எடுத்த, பெண் காவல்துறை ஆய்வாளர்!

ஆம்பூர் அருகே உள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த எஹாசானுமல்லா மற்றும் மெஹ்ரீன் தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 7 வயதான மூத்த மகள் தனது தந்தை, தனக்கு வெகுநாட்களாகக் கொடுத்த வாக்கினை நிறைவேற்றாமல் தன்னை ஏமாற்றிக்கொண்டே வருகிறார் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள செய்தி பலரையும் வெகுவாக கவன ஈர்ப்பு செய்துள்ளதோடு, சிறுமியின் நெகிழ்வான செயல், பலரும் மெச்சும்படியாக அமைந்துள்ளது. மேலும் சிலர் சிறுமி மீது அனுதாபப்பட்டும் வருகின்றனர்.

 

பெரும்பாலான ஊரக மற்றும் கிராமப்புறங்களில் முறையான கழிப்பிட வசதிகளை இன்னும் அரசு மற்றும் தனிமனிதர்கள் நிறுவவில்லை என்பது பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுவதில்லை. உண்மையில் கழிவறை கட்டிக்கொள்ளும் வசதி இல்லாத வீடுகள் இருக்கவே செய்கின்றன. அவர்களுக்காக  ‘பிரதான் மந்திரி வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் பல உள்ளூர் அதிகாரிகள், கண் துடைப்புக்காக, கழிவறைகளை ஒரு சில வீடுகளுக்கு மட்டும் மானிய முறையில் கட்டித் தருகின்றனர்.

 

இந்த நிலையில்தான், மேற்கண்ட பின்தங்கிய ஊரில் வசிக்கும் சிறுமி கழிவறை கட்டுவது பற்றி தன் தந்தையிடம் முறையிட்டிருக்கிறாள்.  ஆனால் வெகுநாட்களுக்கு முன்னதாக தான் நன்றாக படித்து நலல் மதிப்பெண்கள் எடுத்தால், நிச்சயமாக கழிவறை கட்டித் தருவதாக தனது தந்தை உறுதியளித்திருந்த நிலையில், சிறுமி நன்றாக படித்துள்ளாள்.

 

ஆனாலும் கொடுத்த வாக்கினை தந்தை நிறைவேற்றாதமையால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாள்.  இந்த புகாரை  ஏற்றுக்கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர் வளர்மதி, சிறுமியின் கோரிக்கையை ஊரின் கோரிக்கையாக ஏற்று, உடனடியாக ஆம்பூர் நகராட்சி ஊழியர்களை உடனே கழிவறை கட்டும் பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.

FATHER, POLICE, COMPLAINT, 7YEAROLDGIRL, AMBUR, TOILET