உயிருக்கு போராடிய கணவர்.. ரிலாக்ஸாக போனில் பேசிக்கொண்டிருந்த 7 வயது மகன்!

Home > தமிழ் news
By |
உயிருக்கு போராடிய கணவர்.. ரிலாக்ஸாக போனில் பேசிக்கொண்டிருந்த 7 வயது மகன்!

இங்கிலாந்தை சேர்ந்த 28 வயதான  டென் என்பவருக்கு பெக்கி என்கிற 26 வயது மனைவியும், 10 வயதுக்குட்பட்ட இரு மகன்களும் உள்ளனர்.  கடைத்தெருவுக்கு பொருட்களை வாங்குவதற்காக பெக்கி வெளியில் சென்றிருந்த நேரம், வீட்டில் இருந்த டென்னுக்கு திடீரென மயக்கம் வந்ததால் அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

 

அங்கு இருந்த அவரது இரண்டு மகன்களுள் இரண்டாவது மகன், ‘பிரெட்-ஜாம்’ வேண்டி அழுதுகொண்டிருந்துள்ளான். ஆனால் மூத்த மகன் ஹெய்டனோ, தந்தை திடீரென மயக்கமடைந்ததைக் கண்டும், பதற்றப்படாமல், பொறுமையாகவும், சமயோஜித மனநிலையுடனும் போலீஸுக்கு போன் செய்துள்ளான். தந்தையின் உடல்நிலை, மூச்சு பேச்சு பற்றி போலீஸ் கேட்ட கேள்விகளுக்கு, ஹெய்டன் நிதானமாக,  ‘தனது தந்தை உறுதியாக உயிருடன்தான் இருக்கிறார். மூச்சு இருக்கிறது. ஆனால் தன்னுடன் பேசமாட்டேன் என்கிறார்’ என்று பதில் அளித்துள்ளான்.

 

இதற்கிடையே வீட்டுக்குள் நுழைந்த ஹெய்டனின் அம்மா பெக்கி, தன் கணவர் நீரிழிவு நோயின் காரணமாக மயங்கி விழுந்து பேச்சுமூச்சின்றி இருந்ததை உணர்ந்து, தன் மகனை பார்த்துள்ளார். மகனோ போனில் நிதானமாக பேசிக்கோண்டிருந்ததை பார்த்து பெக்கி மேலும் அதிர்ச்சியுற்றார். 

 

உடனடியாக அந்த போனை வாங்கி, தன் கணவரின் நிலையைக் கூறியுள்ளார் ஹெய்டனின் அம்மா. ஆனால் போலீஸோ, குட்டி பையன் ஹெய்டன் எல்லா விவரங்களையும் தெளிவாகக் கூறிவிட்டான் என்றும், உடனடியாக ஆம்புலன்ஸ் விரைந்துகொண்டிருக்கிறது; கவலை வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். 7 வயது மகன் உயிருக்கு போராடிய தனது தந்தையை சமயோஜிதமாக காப்பாற்றியதால், பெற்றோர்கள் இருவரும் நெகிழ்ந்துள்ளனர்.

UK, VIRAL, SON, UNCONSCIOUS DAD, SAVESLIFE, WIFE, POLICE, PRESENCE OF MIND, DAN, BECKY, BRAVEBOY