லஞ்சம் பெற்ற விஏஓ-வுக்கு 8 ஆண்டுக்கு பின் 64 வயதில் தண்டனை!
Home > தமிழ் newsகடந்த 23.11.2010 அன்று மின் இணைப்பு கேட்டிருந்த, அரக்கோணம் கீழாந்துரையை சேர்ந்த ரகுநாதரெட்டி என்பவரிடம் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, உளியம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலரான (விஏஓ) வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். முன்னதாகவே தகவல் தெரிவித்திருந்த ரகுநாதரெட்டியின் புகாரின் பேரில் சுப்பிரமணி கைதும் செய்யப்பட்டார். தன் வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னரே பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
8 வருடங்களாக வேலூர் சத்துவாச்சாரி நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கும் நடந்துவர, இடையில் புகார் கொடுத்த ரகுநாதரெட்டியும் இறந்தே விட்டார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய நீதிபதி என்.பாரி, 2010-ல் லஞ்சம் வாங்கிய, 64 வயதான விஏஓ சுப்பிரமணிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பணியிடைநீக்கம் செய்யப்பட்ட, ஓய்வு பெறும் வயதை எட்டிய விஏஓவுக்கு 8 ஆண்டுகள் கழித்து அளிக்கப்பட்ட தண்டனை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.