‘நீ எப்படி இங்க வரலாம்?’ 6 வயது சிறுவனைக் கொன்ற டிரைவர்.. பதற வைக்கும் காரணம்!
Home > News Shots > தமிழ் newsசவூதி அரேபியாவில் ஷியா பிரிவினைச் சேர்ந்த 6 வயது இஸ்லாமிய சிறுவனை, அந்தச் சிறுவனின் தாயின் கண்முன்பே டிரைவர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இஸ்லாமியர்களில் சன்னி மற்றும் ஷியா எனும் இரண்டு பிரிவினர்களில் சன்னி பிரிவினர் மட்டுமே நபிகள் நாயகத்தை தொழுவதாக அறியப்படுகிறது. ஆனால் இதில் ஷியா பிரிவினர் நபிகளின் மருமகனை தொழும் வழக்கம் உடையவர்களாக கருதப்படுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஷியா பிரிவினைச் சேர்ந்த அல் ஜாபீர் எனும் 6 வயது சிறுவன் ஒருவன் சவூதியின் மதினா நகரில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதிக்கு கடந்த 7-ஆம் தேதி தொழுகையில் ஈடுபடுவதற்காக தன் தாயுடன் சென்றுள்ளான்.
இதனை நோட்டமிட்ட சன்னி பிரிவினைச் சேர்ந்த இஸ்லாம் டிரைவர் ஒருவர் தனது காரில் இருவரையும் ஏற அனுமதித்ததோடு, அவர்களை எந்த பிரிவினை சேர்ந்தவர்கள் என விசாரித்துள்ளார். அவர்கள் ஷியா பிரிவினை சேர்ந்தவர்கள் என்பதை உறுதியாக தெரிந்துகொண்ட பின்னர், அந்த சிறுவனை காரிலிருந்து வெளியில் இழுத்துப்போட்டு, அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து அதன் கூர்மையான பாகத்தால் அந்த சிறுவனின் தாய் பார்க்கும் படியாக, சிறுவனின் கழுத்தை சாகும் வரை அறுத்துள்ளார் அந்த டிரைவர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அச்சிறுவனின் தாய் சம்பவ இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்து போலீஸார் அங்கு வருவதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்ட நிலையில், சன்னி பிரிவினரின் இத்தகைய கொடுரமான செயல் இணையதளம் வழியாக உலக மக்களின் பார்வைக்கு சென்றுள்ளது. தற்போது சிறுவன் ஜாபீரின் இறுதிச் சடங்கு முடிந்த தருவாயில், அச்சிறுவனுக்கான நீதி கேட்டு பலரும் ஆவேசத்தை, கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.