மாயமான 50 பூர்வ தமிழர்கள்.. ஆஸ்திரேலியாவுக்கு கடத்தலா..? கேரளாவை நடுங்கவைக்கும் மர்மம்!

Home > தமிழ் news
By |

டெல்லியில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள சம்பவமும் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலும் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாயமான 50 பூர்வ தமிழர்கள்.. ஆஸ்திரேலியாவுக்கு கடத்தலா..? கேரளாவை நடுங்கவைக்கும் மர்மம்!

டெல்லியில் இருந்து சுற்றுலாவுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் கேரளாவுக்கு கடந்த 12-ஆம் தேதி வந்தபோது அவர்கள் அங்குள்ள புகழ்பெற்ற செராய் கடற்கரை பகுதியில் தங்கியதாகவும், தமிழை பூர்வமாகக் கொண்டவர்கள் இவர்கள் அனைவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், எர்ணாகுளம் அருகே உள்ள முனம்பம் துறைமுக பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் தீவுப்பகுதிக்கு பெரிய மோட்டார் படகு ஒன்றின் மூலம் இவர்கள் 50 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக  வெளியான தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மேலும், கேரளாவின் கடற்கரை பகுதியியில் இருந்து 4,000 கி.மீ தொலைவிலும், ஆஸ்திரேலியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து 1500 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த தீவினில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், சர்வதேச கடத்தல் கும்பலின் குழுவைச் சேர்ந்த இருவரினால் தேவமாதா என்கிற படகினை ரூ.1.02 கோடி பணத்தை ரொக்கமாக கொடுத்து வாங்கியுள்ளது; 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள வாட்டர் டேங்குகளை வாங்கியுள்ளது, 10 லட்சம் ரூபாய்க்கு 12 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பிவிட்டு மீதம் 55 ஆயிரத்தை பெற்றுக்கொள்ளாமல் சென்றுள்ளது உள்ளிட்ட பல தகவல்களை பிரபல புலனாய்வு அமைப்பு ஒன்று வெளியிட்டதோடு, இந்த கடத்தல் திட்டமிடப்பட்டு நிகழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளதால் கேரள மக்களிடையே இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AUSTRALIA, ISLAND, TAMIL ORIGIN, PEOPLE, 50MISSING, KERALA, ENRAKULAM, BIZARRE, BOAT, DELHI, INDIA, SUMGGLING, HUMANTRAFFICKING