"இது என்ன புதுசா இருக்கு"....வைரலாகும் 360 டிகிரி பந்துவீச்சு!
Home > தமிழ் newsகிரிக்கெட்டில் அவ்வப்போது ஆச்சர்யமான சில விஷயங்கள் எப்போதும் அரங்கேறிக்கொண்டே இருக்கும்.அந்த வகையில் தற்போது "ஸ்விட்ச் பந்துவீச்சு" என்னும் முறை தற்போது வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்கூப், ஹெலிகாப்டர் ஷாட், ஸ்விட்ச் ஹிட் என பேட்டிங் சார்ந்த வித்தியாசமான ஆட்டமுறைகள் உள்ளன.இப்போது பந்து வீச்சிலும் இந்த புதிய முறை அறிமுகமாகி அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.பிசிசிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வித்தியாசமான பந்துவீச்சு முறையை ஸ்விட்ச் பந்துவீச்சு என்று கூறியுள்ளது. இடது கை சுழற்பந்துவீச்சாளர் 360 டிகிரி சுழற்பந்துவீச்சை வீசும் விதமாக இருந்தது. ஆனால் இதனை நடுவர்கள் டெட்பால் என அறிவித்தனர். இதுபோன்ற பந்துவீச்சுகள் இப்போது மறுக்கப்பட்டாலும் பின்னர் அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது கிரிக்கெட் ஆர்வலர்கள் பலராலும் இந்த பந்து வீச்சு முறையானது விவாதிக்கப்பட்டு வருகிறது.பால் ஆடம்ஸ் எனும் தென்னாப்பிரிக்க வீரரின் பந்துவீச்சு முறை கடுமையான சர்ச்சைக்கு உள்ளானது.ஆனால் பலகட்ட விவாதத்திற்கு பிறகு அவரின் பந்து வீச்சு முறையானது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவ்வாறு இந்திய வீரர் பும்ராஹ்வின் பந்து வீச்சு முறையானது முதலில் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டது.அதன் பின்பு அது ஏற்று கொள்ளப்பட்டு,இன்று அவர் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
Switch hit for batsman, switch bowling action? This is definitely a kind of first in cricket. #Lka pic.twitter.com/SNJ0xxKnRW
— Manjula Basnayake (@BasnayakeM) November 8, 2018