நாயை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு.. காப்பாற்றும் 3 சிறுவர்கள்.. பரவி வரும் வீடியோ!

Home > தமிழ் news
By |
நாயை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு.. காப்பாற்றும் 3 சிறுவர்கள்.. பரவி வரும் வீடியோ!

ஊருக்கு புறத்தே உள்ள பொட்டல் காடு ஒன்றில் ஒரு நாய் ஒன்றினை ஒரு பெரும் மலைப்பாம்பு சுற்றிக்கொண்டுள்ளது. மலைப் பாம்பு மிக சாதாரணமாகவே பிற உயிர்களை சுற்றிக்கொண்டால், அவ்வளவுதான். அந்த உயிர்களின் எலும்பையே நொறுக்கிவிடும் அளவுக்கு இறுக்கிக் கொன்று உணவாக விழுங்கிவிடும் தன்மை வாய்ந்தது. குறைந்தது ஆறேழு அடியில் தொடங்கும் இப்படியான ஒரு பாம்பு நாய் ஒன்றை வலுவாகவும் திடமாகவும் சுற்றிக்கொண்டது.


அங்கிருந்த சிறுவர்கள் மூன்று பேர் அந்த பாம்பிடம் இருந்து நாயை தனியே பிரித்து எடுக்க முயற்சிக்கும் காட்சிகள் இணையத்தில் வீடியோவாக பரவி வைரலாகி வருகின்றன. நாயின் இடுப்புப் பகுதியை சுற்றிக்கொண்ட அந்த பாம்பின் தலைப்பகுதியை ஒரு சிறுவன் ஒரு கட்டையால் வைத்து அழுத்திக்கொள்ள, இன்னொரு சிறுவன் பாம்பின் வாலை பிடித்துக்கொள்ள இன்னொரு சிறுவன் நாயின் உடலில் சுற்றியிருந்த பாம்பினை முழுமையாக எடுத்து, நாயை காப்பாற்றும் காட்சிகள் இன்றைய வலைதளங்களில் வெகுவேகமாக பரவி வருகின்றன.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AMNOoH (@aminaalsaab) on

DOG, SNAKE, VIRAL, VIDEO, VIRALVIDEO, INSTAGRAM