உயிரிழந்த பெற்றோரை தேடி அழுத 3 வயது குழந்தை.. சேலம் விபத்தில் நிகழ்ந்த சோகம்!

Home > தமிழ் news
By |
உயிரிழந்த பெற்றோரை தேடி அழுத 3 வயது குழந்தை.. சேலம் விபத்தில் நிகழ்ந்த சோகம்!

நேற்று நள்ளிரவு, சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே கேரளாவைச் சேர்ந்தவர்கள் உட்பட 7க்கும் மேற்பட்டோர் பலியானதோடு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், நேற்றைய விபத்தில் எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்ட 3 வயது ஆண் குழந்தை ஈதன் சேலம் மருத்துவமனையில் இன்று காலை முதல் தன் பெற்றோரை தேடியும், அவர்களை அடையாளம் காட்டி கூற முடியாமல் தவித்த சம்பவம் அனைவரயும் உலுக்கியுள்ளது.


விசாரித்ததில், பெங்களூருவில் பணிபுரியும் பினு ஜோசப், சிஜி வின்செண்ட்  தம்பதியினர் இருவரும் வார விடுமுறையை கழிக்க, கேரளாவில் உள்ள கோட்டயத்துக்கு ஈதனுடன் பயணித்து வந்ததும், அவர்கள் கவலைக்கிடமாக உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்கள் விபத்துக்குள்ளான இரு பேருந்துகளில் பாலக்காடு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணித்தவர்கள். இதனையடுத்து குழந்தை ஈதனின் உறவினர்கள் யாரும் வராததால், அவர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ACCIDENT, SELAM, BUSACCIDENT