தொடர்ந்து 6 வாரங்கள் விடுப்பு எடுத்த 236 என்ஜினியர்கள்: அதிருப்தியில் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

Home > தமிழ் news
By |
தொடர்ந்து 6 வாரங்கள் விடுப்பு எடுத்த 236 என்ஜினியர்கள்: அதிருப்தியில் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

புனேவைச் சேர்ந்த ஸ்டியரிங், கியர் தயாரிப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் 236 பேர் ஒரே நேரத்தில் கூட்டாக விடுமுறை எடுத்ததை அடுத்து அத்தனை பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புனேவில் ஸ்டியரிங் மற்றும் கியர் போன்ற முக்கிய வாகன என்ஜின் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ZF ஸ்டியரிங் கியர் நிறுவனம், இவற்றை வால்வோ, டாட்டா மோட்டார்ஸ், அஷோக் லேலெண்ட் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு சப்ளை செய்கிறது.

 

இந்நிறுவனத்தில், கடந்த டிசம்பர் 2017 முதல் ஜனவரி 2018 வரை கிட்டத்தட்ட 6 வாரங்கள் 236 ஊழியர்கள் முன்னறிவிப்பும் முறையான அறிவிப்பும் இன்றி விடுப்பு எடுத்துள்ளதை ஆய்வு செய்யப்பட்ட பிறகு, அவர்களின் இந்த நடத்தையினால் அதிருப்தி அடைந்த நிறுவனம் அத்தனை பேரையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்துள்ளது. 

 

மேலும் ஊழியர்களின் ஊதிய வைப்பு விதிகளின்படி, அத்தனை பேருக்குமான வைப்பு நிதிகள், நிலுவை சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் தரவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

MASSLEAVE, MISCONDUCTION, EMPLOYEES, COMPANY, PUNE, INDIA, FIRE, 236EMPLOYEES