"மலை ஏறவிடாமல் திருப்பி அனுப்பப்பட்ட பெண் பக்தர்கள்":தொடரும் பதற்றம்!
Home > தமிழ் newsசபரிமலைக்கு செல்வதற்காக கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும், ஆந்திராவைச் சேர்ந்த இன்னொரு பெண்ணும் வந்திருந்தனர்.அவர்களை கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று கோரி போராட்டம் நடத்தியவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
சபரி மலைக்கு வயது வித்தியாசம் இன்றி பெண்கள் அனைவரும் செல்லலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் வலுத்து வருகின்றன. இதற்கிடையே, பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக பெரும் போராட்டங்கள் வெடித்தன.மாதவிடாய் பிரச்னையை காரணம் காட்டி அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
சபரி மலைக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலக்கல் பகுதியில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு வரும் வாகனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கார்கள், பஸ், டாக்ஸி உள்ளிட்டவையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனையின்போது பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களிடம் பாரம்பரிய முறையை பின்பற்றுங்கள். சபரி மலைக்கு செல்லாதீர்கள் என்று வயதில் முதிய பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில் சிஎஸ் லிபி என்கின்ற கேரளாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சபரிமலைக்கு செல்ல போவதாக தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவைப் பார்த்த போராட்டக்காரர்கள், லிபியையும் அவரது நண்பர்களையும் மலையில் ஏறிய சில நிமிடங்களில், அவர்களை தடுத்து வந்த வழியே திருப்பி அனுப்பியுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சபரிமலையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.