குழந்தையை கொல்வது எப்படி?"கூகுள் செய்த தாய்"...கொலைக்கான காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

Home > தமிழ் news
By |
குழந்தையை கொல்வது எப்படி?"கூகுள் செய்த தாய்"...கொலைக்கான காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

ஒரு மாத குழந்தை அழுவதைக் கேட்க சகிக்கவில்லை எனக் கூறி,பெற்ற தாயே குழந்தையை கொன்ற கொடூரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் வசிக்கும் 19 வயதான ஜென்னா ஃபோல்வெல் என்னும் இளம் பெண் தனது குழந்தையை காணவில்லை என காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.உடனே சதன ம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜென்னாவிடம் விசாரணை மேற்கொண்டார்கள்.ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததால் அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டார்கள்.

 

இந்நிலையில் சோதனையின் போது அங்கிருந்த ஒரு பையை திறந்து பார்த்த போது,அதில் குழந்தையின் சடலம் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தார்கள்.உடனே இதுகுறித்து ஜென்னாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள்.அப்போது குளியல் தொட்டியில் குழந்தையுடன் குளித்தபோது கண் அயர்ந்துவிட்டதாகவும், விழித்துப்பார்கையில் குழந்தை தலைகீழாக மிதந்ததாகக் கூறினார்.

 

ஆனால் அவர் மீது மேலும் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரது செல்போனை ஆய்வு செய்தார்கள்.அதில் குழந்தையை விரைவாக கொல்வது எப்படி? என இணையத்தில் தேடிய ஹிஸ்ட்ரி அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள் காவல்துறையினர்.

 

தொடர்ந்து ஜென்னாவிடம் கடுமையான விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,இறுதியில் குழந்தையை கொன்றதை அவர் ஒத்துக்கொண்டார்.ஆனால் கொலைக்கான காரணம் தான் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய செய்தது.

 

குழந்தை அழுவதை  கேட்க முடியாததால், சுமார் 1 நிமிடம் குளிக்கும் தொட்டியில் மூழ்கடித்ததாகவும், பின் மனம் கேட்காமல் தூக்கி முதலுதவி செய்தும் பிழைக்கவில்லை என்பதால், சடலத்தை பைக்குள் ஒளித்து வைத்து விட்டு பூங்காவுக்குச் சென்று குழந்தை கடத்தப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் ஜென்னா குற்றத்தை ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஜென்னாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.

MURDER, JENNA FOLWELL, RAINER CANKU-FOLWELL