‘சொன்னா கேளுங்க.. பப்ஜி கேமை தடை செய்யுங்க’.. முதல்வருக்கு சிறுவன் கடிதம்!
Home > தமிழ் newsபப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என 11 வயது சிறுவன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. இதனால் பல நன்மைகளும் சில தீமைகளும் நடந்து கொண்டேதான் உள்ளன. அதிலும் பல விதமான செல்போன்களில், விளையாடும் விளையாட்டுக்கள் புதிதுபுதிதாக வந்தவண்ணம் உள்ளன.
அந்த வகையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு கேம் பப்ஜி. இந்த கேமை சிறியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டை முகம் தெரியாதவர்களுடனும் குழுவாக விளையாட முடியும் என்பதாலும், விளையாடும் போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியும் என்பதாலும், இந்த கேமை அனைவரும் விளையாடுவதாக கூறப்படுகிறது
இந்த பப்ஜி கேமால் தங்களது குழந்தைகள் செல்போனிலேயே அதிக நேரம் செலவழிக்கின்றனர் என்றும் பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ராவில் 11 வயது பள்ளிச்சிறுவன் ஒருவன் கடந்த 25 -ஆம் தேதி அம்மாநில முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளான்.
அந்த கடிதத்தில், பப்ஜி விளையாட்டை, தான் சில நாள்கள் விளையாடியதாகவும், அதிலிருந்து தனக்கு எதிர்மறை எண்ணங்கள் வந்ததாகவும், மேலும் அதில் கொலை போன்ற வன்முறைகள் அதிகமாக இருப்பதாலும் இந்த கேமை தடை செய்ய வேண்டும் என்று சிறுவன் குறிப்பிட்டுள்ளான்.