தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து சுமார் 10 லட்சம் மாணவ,மாணவிகள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின. இதில் மாணவிகள் 96.4%, மாணவர்கள் 92.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
தேர்ச்சி விகிதத்தில் முதல் 3 இடங்களை சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் பிடித்துள்ளன.சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 98.38% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.விருது நகர் மாவட்டம் 98.26% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 1180-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்!
- பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்!
- 'பிளஸ் 2' தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வேண்டுமா?