தோனி ஓய்வு பற்றிய சர்ச்சைகள் குறித்து சச்சின் கருத்து

சமீபத்திய இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடாததால் இந்திய அணியின் விக்கெட்கீப்பர் தோனியின் ஓய்வு குறித்த கருத்துகளும் சர்ச்சைகளும் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் தோற்றபிறகு தோனி நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கிச்சென்றார்.


இந்த நிகழ்வால் தோனி ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால் தோனி இதுகுறித்து வாய்திறக்காத நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.


இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பாவான் வீரன் சச்சின் டெண்டுல்கர் இந்த விவகாரத்தில் தோனிதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது:


தோனி ஒரு திறமையான ஆட்டக்காரர். அவர் நீண்டகாலமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது அவருக்குத் தெரியும். அவர் இப்போது எந்த நிலையில் தற்போது இருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால் இது குறித்த முடிவை நான் அவரிடமே விட்டுவிடுகிறேன்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 22, 2018 6:09 PM #MSDHONI #SACHINTENDULKAR #MSDHONIRETIREMENT #SPORTS NEWS