வீடியோ: தோழியின் திருமணத்தில் நடனமாடி அசத்திய தோனியின் மனைவி சாக்ஷி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் மனைவி சாக்ஷி தனது தோழியும் பிரபல அரசியல்வாதி பிரபுல் படேலின் மகளுமான பூர்ணா படேலின் திருமணத்தில் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார். இந்த திருமண விழாவில் பல்வேறு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.


திருமணத்தில் தோனி தன் மனைவி மற்றும் மகள் ஜிவா ஆகியோருடன் கலந்துகொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்திய அணியின் விக்கெட்கீப்பரான தோனியும் 'கிளீன்-ஷேவ்' தோற்றத்தில் கலக்கினார்.

BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 22, 2018 4:44 PM #MSDHONI #POORNAPATELWEDDING #SAKSHIDHONI #SPORTS NEWS