முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடியும், பள்ளிகளில் 3 முதல் 8-ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகளின் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு திறக்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.