தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டுத் தொடர் வரும் 14-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. சபாநாயகர் தனபால் தலைமையில், தமிழக பட்ஜெட்டினை அதிமுக அமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்களையும் குறைகளையும் பற்றிய விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
அந்த பட்ஜெட் பற்றிய விபரங்களையும் முழுமையாக தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்விதம் பயன்பட போகிறது, யாருக்கெல்லாம் என்ன விதமான நன்மையை தரப்போகிறது என்பதை பட்ஜெட் அறிக்கையை வைத்து பார்க்க முடிகிறது. அதே சமயம், கடந்த பட்ஜெட்டில் இருந்து பல விஷயங்கள் மாறாமல் அப்படியே இருப்பதும், பலருக்கு பட்ஜெட் போதாமையுடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பன்னீர் செல்வம் வாசித்த பட்ஜெட்டினை பற்றிய முழு விபரங்களை இங்கு காணலாம்.
தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-2020-ஆம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என்று இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2020 மார்ச் 31-ல் தமிழக அரசின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.