புதுடெல்லி 02, பிப்ரவரி 2022:- நாடாளுமன்றத்தில் நடந்த குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸின் வயநாடு தொகுதி எம்.பி.யும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, பங்கேற்றுப் பேசிய பேச்சு இந்திய அளவில் அதிர வைத்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாராளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டுக்கு ஆதரவும், விமர்சனங்களும் தொடர்ந்து வருகின்றன. இதுகுறித்து பேசிய நரேந்திர மோடி, இந்த பட்ஜெட் அதிக உள்கட்டமைப்பு, அதிக முதலீடு, அதிக வளர்ச்சி, அதிக வேலைகள் எனும் கொள்கையை பின்தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், நெடுஞ்சாலை திட்டம், ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, 400 வந்தே பாரத் ரெயில் , 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்ஜெட் மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Rahul Gandhi: 2 இந்தியாக்கள்
இப்போது 2 இந்தியாக்கள் உள்ளன.. ஒன்று ஏழைகளுக்கு மற்றொன்று பணக்காரர்களுக்கு. இந்த இரு இந்தியாவிற்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேவருகிறது.