RADHE SHYAM (TAMIL) MOVIE REVIEW



Release Date : Mar 11,2022 Mar 10, 2022 Movie Run Time : 2 hour 18 minutes
Censor Rating : UA Genre : Drama, Romance
CLICK TO RATE THE MOVIE
Advertising
Advertising

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் 'பாகுபலி' பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வம்சி - புரமோத் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின்‌ ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் இப்படத்தை தமிழில் ரிலீஸ் செய்துள்ளது.

26 நவ 1976-ல் கதை தொடங்குகிறது. பெரும் ஜோதிட ஞானி சத்யராஜ் அறிவியலுக்கு முன்னரே ஜோதிடம், வானவியல் சாஸ்திரம் அனைத்தையும்‌ கணித்ததை பற்றி கூற, அவருடைய சிஷ்யனும்‌ பெரிய கை ரேகை ஜோதிடரும் விக்ரமாதித்யாவாக அறிமுகம் ஆகிறார் பிரபாஸ். டாக்டராக வரும் பூஜா ஹெக்டேவுடன் காதல் அல்லாத 'பளர்ட் வகை காதல்' கொள்கிறார். தனக்கு காதல் ரேகையே இல்லை என தீர்க்கமாக நம்பும் பிரபாஸ் மீது, பூஜா ஹெக்டே கொள்ளும் காதல் என்னாகிறது? ஹீரோயினின் வாழ்நாள் குறித்த பிரபாஸின் கணிப்பு பலித்ததா? பிரபாஸின் வாழ்க்கை முடிவு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.‌ 

ஜோதிட நம்பிக்கை, காதல், ரிலேஷன்ஷிப், பிரிவு என அனைத்தையும்  ஒரே நேர்க்கோட்டில் இணைத்திருப்பது திரைக்கதையின் பலம். முற்பாதி நாயகியின் வாழ்வு பற்றியும் பிற்பாதி பிரபாஸின் வாழ்வு பற்றிய ரிவீலேஷனும் திரைக்கதையில் முக்கிய ட்விஸ்ட். "விதியை யாராலும் மாற்ற முடியாது" என்கிற பிரபாஸின் நம்பிக்கையை காட்டிவரும் அதே சமயம், இன்னொரு  லேயரில் அதை கவுண்ட்டர் பண்ணும் விதமாக, "ஜோதிட நம்பிக்கை என்பது 99% அறிவியல், 1% காலத்தின் கையில்" என்கிற சத்யராஜின் வசனமும் வந்து போவது 2-ஆம் பாதி திரைக்கதை என்கேஜிங்காக இருக்க உதவுகிறது.

காட்சிக்கு காட்சி வாழ்க்கை, தத்துவம், காதல் ரசம் ததும்பும் கவிதைகள் என அழகு சேர்க்கிறது கார்க்கியின் வசனம்.‌ கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் எடிட்டிங் கச்சிதம் - இன்னும் கொஞ்ச கத்தரி போட்டிருக்கலாம். காட்சி பிரம்மாண்டத்துடன் கைகோர்க்கிறது எஸ்.தமனின்  பின்னணி இசை. கார்க்கியின் வரிகளில், ஜஸ்டின் பிரபாகரனின் இசை, பாடல்கள் மனதில் பதிய மறுத்தாலும்  கதைச்சூழலுடன் பொருந்தி வருகின்றன. ரோம் நகரம், கப்பல், மாளிகை என கண்கவர் விஷூவல் அனுபவத்தை தருகிறது ஆர்ட் வொர்க். பீரியட் படத்துக்கு தகுந்த காஸ்டியூமும், வைபவி மெர்ச்சத்தின் நடன அமைப்பும் ஹிஸ்டாரிக்கல் காலக்கட்டத்துக்கு உதவுகின்றன.

திரைக்கதையின்‌ ட்ரீட்மெண்ட் கதையில் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் காதலுடன் ஆடியன்ஸ் கனெக்ட் ஆக முடிவதில்லை. அவர்களின் காதலில் ஆழம் காட்டப்படுவதில்லை. காட்சிகளால் - கேரக்டரால் அல்லாமல் மிகைப்படுத்தப்பட்ட ரொமான்ஸ் வசனங்களாலும் கவிதைகளாலும் மட்டுமே காதல் சொல்லப்படுகிறது. பீரியட் மற்றும் ஃபேண்டஸி எலிமெண்ட் கதைக்கு உதவவில்லை. யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸை நோக்கி படம் மெதுவாக செல்வது அலுப்பைத் தருகிறது.‌

RADHE SHYAM (TAMIL) VIDEO REVIEW

Verdict: ராதே ஷ்யாம் - மெலோ டிராமா காதல் கதை, பிரம்மாண்ட விஷூவல் ட்ரீட்.

BEHINDWOODS REVIEW BOARD RATING

2.5
( 2.5 / 5.0 )
Click to show more

REVIEW RATING EXPLANATION

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

RELATED CAST PHOTOS

CLICK FOR RADHE SHYAM (TAMIL) CAST & CREW

Production: Bhushan Kumar, Vamsi - Pramod
Cast: Bhagyashree, Kunal Roy Kapur, Pooja Hegde, Prabhas, Sachin Khedekar
Direction: Radha Krishna Kumar
Music: Justin Prabhakaran
Background score: S Thaman
Cinematography: Manoj Paramahamsa
Editing: Kotagiri Venkateswar Rao
Art direction: Nick Powell
Dance choreography: Vaibhavi Merchant
Lyrics: Kumaar, Manoj Muntashir, Mithoon, Rashmi Virag
PRO: Nikil Murugan
Distribution: Red Giant Movies

Radhe Shyam (Tamil) (aka) Radhe Shiyam (Tamil)

Radhe Shyam (Tamil) (aka) Radhe Shiyam (Tamil) is a Tamil movie. Bhagyashree, Kunal Roy Kapur, Pooja Hegde, Prabhas, Sachin Khedekar are part of the cast of Radhe Shyam (Tamil) (aka) Radhe Shiyam (Tamil). The movie is directed by Radha Krishna Kumar. Music is by Justin Prabhakaran. Production by Bhushan Kumar, Vamsi - Pramod, cinematography by Manoj Paramahamsa, editing by Kotagiri Venkateswar Rao and art direction by Nick Powell.