JACKPOT (TAMIL) MOVIE REVIEW



Release Date : Aug 02,2019 Aug 01, 2019 Movie Run Time : 2 Hours 22 Minutes
Censor Rating : U
CLICK TO RATE THE MOVIE
Jackpot (Tamil) (aka) Jackpott review

நடிகர் சூர்யா தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி இணைந்து கலக்கும் கமர்ஷியல் காமெடி படம் இந்த 'ஜாக்பாட்'. திருட்டு மற்றும் பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள் ஜோதிகாவும் ரேவதியும். அவர்களுக்கு எதைப் போட்டாலும் பல மடங்கு திருப்பி தரும் அட்சய பாத்திரம் பற்றி தெரியவருகிறது.

அந்த அட்சய பாத்திரம் என்கிற ஜாக்பாட்டை அடைய அவர்கள் செய்யும் பிரயத்தனங்கள் தான்  இந்த படத்தின் கதை. அதிரடி ஆக்சன், டான்ஸ்,  காமெடி என ஒரு மாஸ் ஹீரோக்கு நிகராக இறங்கி அடித்திருக்கிறார் ஜோதிகா. தன்னால் முடிந்த வரை அந்த  வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக படம் முழுக்க தன் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார் ரேவதி.

ஆண், பெண் என இரட்டை வேடங்களில் வெவ்வேறு உடல் மொழி, டயலாக் டெலிவரி என வித்தியாசம் காட்டி படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார் ஆனந்தராஜ். அவர் வரும் காட்சிகளெல்லாம் தியேட்டரில் சிரிப்பு சரவெடி.

யோகி பாபு ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்க முயற்சிக்கிறார். மொட்டை ராஜேந்தர், மன்சூர் அலிகான், மனோபாலா , ஜெகன் உள்ளிட்டோர் படத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு காமெடி படத்துக்கு தேவையான பின்னணி இசையை வழங்கி படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். மூன்று காலகட்டங்களை நேர்த்தியாக படமாக்கி தனது ஒளிப்பதிவால் கவனம் ஈர்க்கிறார் ஆர்.எஸ்.ஆனந்தகுமார்.

அள்ள அள்ள கொடுக்கும் அட்சய பாத்திரம், அதைய அடைய நடக்கும் போராட்டம் என கதையாக கேட்கும் இருக்கும் சுவாரஸியம் திரைக்கதையில் சற்று குறைவு. ஜோதிகாவும் ரேவதியும் ஏன் திருட்டு மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார் என்ற ஃபிளாஸ்பேக் காரணம் பெரிதாக பாதிக்கவில்லை. காமெடிக்காக வைக்கப்பட்ட சில காட்சிகளில் லாஜிக் பிரச்சனைகள் இருப்பதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இருப்பினும் காமெடி படமாக கவனம் ஈர்க்கிறது இந்த ஜாக்பாட்.

JACKPOT (TAMIL) VIDEO REVIEW

Verdict: ஜோதிகா, ரேவதியின் மாஸான நடிப்பு, ஆனந்தராஜின் காமெடிக்காக இந்த ஜாக்பாட்டை ஒருமுறை பார்க்கலாம்.

BEHINDWOODS REVIEW BOARD RATING

2.25
( 2.25 / 5.0 )
Click to show more

REVIEW RATING EXPLANATION

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

RELATED CAST PHOTOS

Production: 2D Entertainment
Cast: Jyothika
Direction: Kalyaan S
Screenplay: Kalyaan S
Story: Kalyaan S
Music: Vishal Chandrashekhar
Background score: Vishal Chandrashekhar

Jackpot (Tamil) (aka) Jackpott

Jackpot (Tamil) (aka) Jackpott is a Tamil movie. Jyothika are part of the cast of Jackpot (Tamil) (aka) Jackpott. The movie is directed by Kalyaan S. Music is by Vishal Chandrashekhar. Production by 2D Entertainment.