CHAMPION (TAMIL) MOVIE REVIEW



Release Date : Dec 13,2019 Dec 15, 2019 Movie Run Time : 1 hour 48 minutes
Censor Rating : U/A
CLICK TO RATE THE MOVIE

இறந்து போன அப்பா கற்றுத்தந்த ஃபுட்பாலின் தடம் பதிக்க ஆசைப்படுகிறான் ஜோன்ஸ். ஆனால் ஒரு நாள் அவன் அப்பாவின் மரணம் ஒரு கொலை என தெரிய வருகிறது.

அப்பாவை கொன்ற ரவுடியை பழிவாங்க திட்டமிடும் அவன் இறுதியில் கொலைகாரன் ஆனானா அல்லது ஃபுட்பால் சாம்பியன் ஆனானா என்பதே சாம்பியனின் கதை.

வடசென்னையில் வாழும் திறமையான ஃபுட் பால் வீரர்களையும், அவர்கள் எப்படி திசைமாற்றப் படுகிறார்கள் என்பதையும் ஒரு நல்ல படைப்பின் மூலம் தந்திருக்கிறார் சுசீந்திரன்.

ஜோன்சாக நடிக்கும் விஷ்வாவின் இறுக்கமான உடல்வாகு  ஃபுட்பால் பிளேயர் கதாப்பாத்திரத்துக்கு சரியாக பொருந்தி வருகிறது. ஆனால் எப்போதும் ஒரே முகபாவத்துடன் இருப்பதை தவிர்த்திருக்கலாம். நாயகியாக வரும் மிருநாளினிக்கு அவ்வளவாக வேலை இல்லை.

தந்தை கதாப்பாத்திரம் மூலம் 'கம்-பேக்' கொடுத்திருக்கும் மனோஜ் பாசமுள்ள அப்பாவாக நம் கண்ணில் நிற்கிறார். அவர் இறக்கும் காட்சி அதிர்ச்சியளிக்கிறது.

விஷ்வாவை இன்னொரு அப்பா போலவே பார்த்துக் கொள்ளும் கோச் நரேன் இறுதியில் அவனுக்காக செய்யும் தியாகம் நெகிழ செய்கிறது. வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் ஸ்டண்ட் சிவா மிரட்டி இருக்கிறார்.

வட சென்னையில் இருந்து வரும் படித்த இளைஞர்கள் மீது இந்த சமூகம் எவ்வாறு முத்திரை குத்தியிருக்கிறது என்பது படத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

ஆரோல் கரோலியில் இசை படமெங்கும் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. படத்தின் சிறப்பான சவுண்ட் டிசைனும் பாராட்டிற்குரியது. சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில் படமெங்கும் Pull focus.

புதிய காட்சிகள் அதிகம் இல்லாவிட்டாலும் கதை எடுத்துக்கொண்ட களத்தில் பிசிறில்லாமல் பயணிப்பதால் சாம்பியன் ஜெய்க்கிறான்.

Verdict: 'சாம்பியன்' ஃபுட் பால் கனவுக்கும் பழிவாங்கும் உணர்வுக்கும் இடையில் அல்லாடும் இளைஞனின் ஆக்‌ஷன், பாலிடிக்ஸ் கலந்த விறுவிறுப்பான சித்தரிப்பு.

BEHINDWOODS REVIEW BOARD RATING

2.75
( 2.75 / 5.0 )
Click to show more

REVIEW RATING EXPLANATION

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

RELATED CAST PHOTOS

CLICK FOR CHAMPION (TAMIL) CAST & CREW

Production: Kalanjiam Cine Arts
Cast: Jayaprakash, Mirnalini Ravi, Narain, Roshan
Direction: Suseenthiran
Screenplay: Suseenthiran
Music: Arrol Corelli
Cinematography: Sujith Sarang
Editing: Thiyagu

Champion (Tamil) (aka) Chaampion

Champion (Tamil) (aka) Chaampion is a Tamil movie. Jayaprakash, Mirnalini Ravi, Narain, Roshan are part of the cast of Champion (Tamil) (aka) Chaampion. The movie is directed by Suseenthiran. Music is by Arrol Corelli. Production by Kalanjiam Cine Arts, cinematography by Sujith Sarang, editing by Thiyagu.