சந்தானம் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அக்யூஸ்ட் நம்பர் 1. வேலையில்லாமல் ஏரியா லோக்கலில் ஜாலியாக சுற்றிக்கொண்டு ஐயங்கார் பெண்ணை கரம் பிடிக்க சந்தானம் செய்யும் காமெடி அலப்பறைகளே படத்தின் கதை.
படத்தின் பிளஸ் ஹீரோ சந்தானம். அசால்ட்டான பாடி லாங்குவேஜ், டைமிங் காமெடி என சீனுக்கு சீன் சிக்ஸர் அடிக்கிறார். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு காமெடி வேடத்தில் எம்.எஸ் .பாஸ்கர் - மிகச் சிறப்பு.
வட இந்திய ஹீரோயின் தாரா, லிப் சிங்க் பிரச்சனை இருந்தாலும் தனது வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார். டைகர் தங்கதுரை, டோனி, சாய்குமார், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், மனோகர் என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனும் காமெடி படத்துக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். காட்சிகளை சரியாக இணைத்து சுவாரசியப்படுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால்.
படத்தில் காட்சிக்கு காட்சி சிரிப்பலைகளால் அரங்கம் அதிர்கிறது. மரணம் போன்ற சீரியசான விக்ஷயங்களையும் காமெடியாக சொல்லியிருப்பதால் படத்தில் ஒன்றமுடியவில்லை, ஆனால் டைம்பாஸ் காமெடி பிடிக்கும் என்றால் அதனையும் ரசிப்பீர்கள்
படத்தில் ஆங்காங்கே லாஜிக் மீறல்களால் படத்தின் மீதான நம்பகத் தன்மை குறைகிறது. இருப்பினும் முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக கவனம் ஈர்க்கிறான் இந்த ஏ1.