‘ஆம்பள’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு படமான ‘டெம்பர்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான ‘அயோக்யா’ திரைப்படத்தில் விஷால் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ‘ஆம்பள’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டன.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும், தமன்னா வரும் மார்ச் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக, இப்படத்தின் ஷூட்டிங் பிப்.15ம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால் நடிக்கும் 27வது திரைப்படமான இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், ஷூட்டிங் குறித்த அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.