பூஜையுடன் தொடங்கிய தளபதி 63 ஷூட்டிங்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியது.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வால்ம் வரும் நடிகர் விஜய், ‘மெர்சல்’, ‘சர்கார்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘தளபதி 63’ படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த பூஜையில் நைட்கர் விஜய் உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். தளபதி 63 பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தொடர்ச்சியாக 3வது முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள இபப்டத்திற்காக பிரத்யேகமாக சென்னை பின்னி மில்லில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜையை தொடர்ந்து ஷூட்டிங் பணிகள் நாளை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தீபாவளி பண்டிகையையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

Vijay's Thalapathy 63 directed by Atlee, shooting begins with a pooja

People looking for online information on Atlee, Nayanthara, Thalapathy 63, Vijay will find this news story useful.