துருவ், சஞ்சய் காம்போவில் பிரம்மாண்ட ஷங்கர் படம்?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனும், சீயான் விக்ரமின் மகனும் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு இரு தரப்பினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் நடித்த ‘2.0’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உலகநாயகன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை 2020-ல் வெளியிட ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார்.

இதனிடையே, தனக்கே உரிய பிரம்மாண்டத்துடன் இளம்  நடிகர்களை வைத்து ஒரு படத்தை ஷங்கர் இயக்கப்போவதாகவும், அந்த படத்தில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் ஜேசனும், விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் முன்னணி நடிகர்களாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இது குறித்து சம்மந்தப்பட்டவர்கள் தரப்பில் கேட்டபோது, இந்த தகவலை மறுத்ததுடன் இது போன்ற பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம், பாலா இயக்கியுள்ள ‘வர்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இதேபோல் நடிகர் விஜய்யின் மகனும் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களை இயக்கி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ‘ஜங்ஷன்’, ‘சிரி’ போன்ற குறும்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

Vijay's son Sanjay and Vikram's Son Dhruv in Shankar film?

People looking for online information on Dhruv Vikram, Indian 2, Sanjay Jason Vijay, Shankar, Vijay, Vikram will find this news story useful.